ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆழியார் பூங்கா ,கவியருவி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. மேலும் வால்பாறை செல்வதற்கு இந்தப் பாதையை பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வனத்தின் நடுவே செல்லும் இந்த பாதையில் அவ்வப்போது வனவிலங்குகள் தென்படும். குளுமையான சூழலை ரசிக்கவும், சுற்றுலாவை மகிழ்ச்சியாக கொண்டாடவும் வெளி ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது உண்டு.
விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் நுழைவு கட்டணம் எடுப்பதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து எடுக்க வேண்டிய சூழல் நிலவி வந்தது.
இதனை அடுத்து பொள்ளாச்சி அடுத்த ஆழியார் வனத்துறை சோதனை சாவடி வழியாக சுற்றுலா செல்ல ஃபாஸ்ட் டேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்க தேவையில்லாததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.