Skip to content
Home » 2026 தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும்…..திருச்சியில் திருமா., பேட்டி

2026 தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும்…..திருச்சியில் திருமா., பேட்டி

  • by Senthil

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி  வந்தார்.  பின்னர் அவர் காரில்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் நியாய விலை கடை திறப்பு விழா மற்றும் பள்ளிபள்ளிக்கூட அறைகள் திறப்பு விழாக்களிலும் கலந்து கொள்ள  புறப்பட்டார்.

முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும்  செயலாளர்கள்  நியமிக்க முடிவு எடுத்துள்ளோம்.

ஏற்கனவே 144  செயலாளர்கள்  நியமித்து ஓராண்டு கடந்திருக்கிறது.

கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நுண்ணிய அளவில் வரைமுறை செய்து ஏராளமான பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய முடிவு எடுத்துள்ளோம்.

கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு எந்த தேவையும் எழவில்லை. ஏற்கனவே நாங்கள் ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழக
கூட்டணியில் இருந்து வருகிறோம்.

அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளோம்.  இந்த  கூட்டணிகளை உருவாக்கியதில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு பங்கு உண்டு.நாங்கள் உருவாக்கிய கூட்டணிகளை மேலும் பலப்படுத்த வேண்டும்.முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் தான் என்னுடைய கவனம் இருக்கிறது.

இந்த கூட்டணிகளை விட்டுவிட்டு இன்னொரு கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற தேவையில்லை. ஏற்கனவே பலமுறை நான் சுட்டிக்காட்டி உள்ளேன். திட்டமிட்டு விடுதலை சிறுத்தைகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிற முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். நம்பகத்தன்மையை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர். இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன்.

நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம் மதசார்பற்ற கூட்டணி உருவாக்கியதில் எங்களுக்கு பங்கு உண்டு. அது எங்கள் கூட்டணி.

இந்தியா  கூட்டணி உருவாக்கியதில்  எனக்கு பங்கு உண்டு. எனவே, எங்களுக்கான கூட்டணியை சிதறடிக்க வேண்டிய தேவை விடுதலை சிறுத்தைகளுக்கு இல்லை.2026 நடைபெறும் சட்டமன்றத்  தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்

புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க இசைவளித்து ஓராண்டு ஆகிறது. ஏற்கனவே ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த நாளில் வெளியிட திட்டமிட்டு இருந்தது விகடன், ஆதவ்  அர்ஜூன் நிறுவனமும் இணைந்து இந்த புத்தகத்தை கொண்டு வருகிறார்கள்.
ராகுல் காந்தியையும் அழைப்பதாக திட்டமிட்டு இருந்தனர்.
40 பேருடைய கட்டுரையின் தொகுப்புகள் தான் எல்லோருக்கும் அம்பேத்கர் என்ற தலைப்பில் புத்தகம் உள்ளது.

இப்போது சில வாரங்களுக்கு முன்பு ரஜினிகாந்தையும் அழைக்கலாம் என தகவல் சொன்னார்கள்.
த வெகா மாநாடுக்கு முன்பாக விஜயை அழைக்கலாம் என  சொன்னார்கள். அதற்கும் நான் இசைவு தெரிவித்திருந்தேன்.

திராவிடத்தைப் பற்றி ஏற்கனவே கருத்து சொல்லி உள்ளேன். திராவிடர் என்பது தமிழக அரசியல் என்பது போல  பிம்பத்தை உருவாக்குகிறார்கள். இது தவறு திராவிடத்தால் வீழ்ந்தோம் என சொல்வதை விட வாழ்ந்தோம் வரலாறு  படைத்தோம் என்பதுதான் முக்கியமான அரசியல்.

சாதியம்தான் நம்மை பிளவுபடுத்தி பிடித்துள்ளது, வீழ்த்தியுள்ளதுஅதனை எதிர்க்க வேண்டும் என்றால் ஆரியத்தை எதிர்க்க வேண்டும் அதிலிருந்து முற்றாக மாற்றம் செய்ய வேண்டும்.

திராவிடம் என்பது கருத்தியல். நிலைப்பரப்பை குறிப்பது அல்ல. அது ஒற்றை மொழி அல்ல .

கற்பனை செய்து கொண்டு அதன் நிலப்பரப்பு எல்லை என்று சொல்வது கற்பனை வாதம். திராவிடம் என்பது கருத்துகள். சாதியத்திற்கு எதிராக பேசிய அரசியல்.

பெரியாருக்கு முன்னதாகவே இந்த தமிழ் மண்ணில் திராவிடம் குறித்து பேசப்பட்டுள்ளது.

சைவ எழுச்சி எழுந்த போது ஆரிய எதிர்ப்பு உண்டானது. அப்போது திராவிடர் என்று சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திராவிடம் கருத்தியல் இல்லை என்றால் சனாதன நம்மை விழுங்கி இருக்கும், இந்தி தமிழை விழுங்கி இருக்கும்

திராவிட ,  பெரியார் கருத்தியல் இல்லாமல் இருந்திருந்தால் சமஸ்கிருதம் தமிழை விழுங்கி இருக்கும்.
தமிழர் இனம் இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் திராவிட கருத்தியல் தான்.‘

இவ்வாறு அவர் பேசினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!