Skip to content

திருச்சி ஏர்போட்டில் ஜிபிஎஸ் கருவியுடன் சென்ற நபரிடம் விசாரணை…

  • by Authour

திருச்சியிலிருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த ஸ்கூட் விமானம் செவ்வாய்க்கிழமை புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் பயணிக்க சிங்கப்பூரைச் சேர்ந்த (அந்நாட்டின் குடியுரிமை பெற்ற) சஞ்சய் (36) என்ற வாலிபர் திருச்சி விமான நிலையம்வந்திருந்தார். வழக்கமான பாதுகாப்பு மற்றும் குடியேற்றப்பிரிவு, சுங்கத்துறை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட பாதுகாப்பு சோதனையில், சஞ்சய் ஜிபிஎஸ் கருவி சாதனத்துடன் கூடிய மடிக்கணினியுடன் பயணித்தது தெரியவந்தது.
பொதுவாக ஜிபிஎஸ் சாதனங்களை விமானங்களில் உரிய அனுமதியுடன்தான் கொண்டு செல்ல முடியும். ஆனால் சஞ்சய் எந்த அனுமதியும் பெறவில்லை எனவே, சஞ்சயை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், சஞ்சய் சிங்கப்பூரில் ஆயுதப்படையில் (ஆர்ம்டு போர்ஸில்) இன்ஃபன்ட்ரி விங்கில் கேப்டனாக பணிபுரிந்து வருவது தெரியவந்தது. இதனையடுத்து அறிவுரை கூறி அவரை விமானத்தில் பயணிக்க போலீசார் அனுமதித்தனர்.

error: Content is protected !!