ஜோலார்பேட்டையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 45 கோடி மதிப்பீட்டில் 464 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 6253 பயனாளிகளுக்கு கடன் உதவிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு 464 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 6,253 பயனாளிகளுக்கு 45 கோடி 35 லட்சம் மதிப்பீட்டிலான கடன் உதவிகளை அமைச்சர் வழங்கினார்
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் பெண்களை படி, படி என்று சொன்னது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞரும் தான் பெண்களைப் படிக்க வேண்டும் என்று சொன்ன விளைவு தான் தமிழ்நாட்டிலே அரசு நிர்வாகத்தில் பெண்கள் இருக்கிறார்கள் படிக்கவில்லை என்று சொன்னால் எப்படி உரையாற்ற முடியும்? அப்படிப்பட்ட இந்த பெண்கள் சமுதாயத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக திராவிட இயக்கம் தான் போராடியது
சில பேர் சொல்வார்கள் திராவிட இயக்கம் என்ன செய்தது என்று திராவிட இயக்கமே இல்லை என்று சொன்னால் தமிழ்நாட்டிலே 50 ஆண்டு காலத்துக்கு பின்னோக்கி சென்று கொண்டிருப்போம் இன்றைக்கு திராவிட இயக்கம் வந்த காரணத்தினால் தான் தமிழ்நாட்டிலே மக்களுக்கு தெளிவு ஏற்பட்டுள்ளது
பெண்கள் படித்த காரணத்தினால் தான் சமுதாயம் முன்னேறி இருக்கிறது ஆண்களை விட பெண்கள் படிக்க வேண்டும் என்று சொன்னதற்கு காரணம் என்ன ஒரு வாரிசு பெண் பெற்றெடுப்பதோடு மட்டுமல்ல அந்த வாரிசு இறையாகி பாலை வர்ப்பது பெண்கள்தான் அதை படிக்க வைப்பதுக்கும் ஒன்று சத்தியாக இருப்பது நம் பெண்கள் தான் அதனால்தான் சமுதாயத்திலே பெண்கள் படிக்க வேண்டும் என்று சொன்னார்கள் என பேசினார்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.