டில்லியில் நடைபெற்ற சர்வதேச மன எண் கணித போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த செம்பனார்கோவில் சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் உற்சாக வரவேற்பு:-
கடந்த 14 மற்றும் 15ஆம் தேதிகளில் புதுடில்லியில் டெல்லி யுனிவர்சிட்டி சார்பில் சர்வதேச அளவில் மன எண் கணித போட்டி (யுனிவர்சல் கான்செப்ட் ஆஃப் மென்டல் அரித்மெடிக் சிஸ்டம்) நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து 30 நாடுகளைச் சேர்ந்த 6 ஆயிரம் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் தாமரை சிபிஎஸ்சி பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கே. ஆர். செல்வராம் மற்றும் கே. ஆர். கலைராம் ஆகிய இருவர் பங்கேற்றனர். இதில் “A” பிரிவில் 6ஆம் வகுப்பு மாணவன் கே. ஆர். செல்வராம் மூன்றாவது இடத்தையும் “B” பிரிவில் 3ஆம் வகுப்பு மாணவன் கே. ஆர். கலைராம் மூன்றாவது இடத்தையும் பிடித்து சிறப்பிடம் பெற்று நாட்டிற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இந்நிலையில் வெற்றி பெற்று பள்ளிக்கு வந்த மாணவர்களை பள்ளி நிர்வாகம் சார்பில் கலைமகள் கல்வி குழுமம் நிர்வாக இயக்குனர் குடியரசு, தலைமையாசிரியர் மகாலெட்சுமி மற்றும் ஆசிரியர்கள் இரு மாணவர்களையும் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியை மோகனசெல்வியை வாழ்த்தி பாராட்டு தெரிவித்து சால்வை அணிவித்து பரிசு வழங்கினர். மாணவர்களிடம் ஆசிரியர்கள் கேட்ட மன என் கணித கேள்விகளுக்கு உடனடியாக பதில் சொல்லி மாணவர்கள் அசத்தினர். முன்னதாக வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.