கரூர் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில்,திமுக தேர்தல் வாக்குறுதிபடி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரியும், சென்னையில் போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களை கைது செய்யும் நடவடிக்கையை கண்டித்தும், கண்டன ஆர்ப்பாட்டமும் தர்ணா போராட்டமும்
கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் தேவதாஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நாகராஜ் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 2009 ஆம் ஆண்டு திமுக அரசு கொண்டு வந்த இந்த ஊதிய பாகுபாட்டினை தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசுதான் சரி செய்ய வேண்டும்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால்,தொடர் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் . விடுமுறை நாட்களில் ஆர்ப்பாட்டம் செய்து வந்த எங்களை தற்போது பணி நாட்களிலேயே போராட்டம் நடத்தும் அளவிற்கு தூண்டியது. தமிழக அரசுதான். எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என உரிமை முழக்கத்துடன் கேட்டுக்கொள்கிறோம் என கோசங்கள் எழுப்பப்பட்டது.