திருச்சிராப்பள்ளி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணி புரிந்து வரும் பெண் காவலர் செல்வி. பிரீத்தி என்பவர் தினந்தோறும் சமூக வலைதளத்தை கண்காணித்து அதில் வரும் ஆபாசமான மற்றும் சட்டவிரோத செயல்கள் தொடர்பாக ஆய்வு செய்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பணி செய்து வரும் நிலையில், நேற்று (18.09.2024) Instagram வலைதளத்தை gana_gowtham_puchi_katra_thali sr Instagram ID-6 பயன்படுத்தி வரும் பெயர் தெரியாத நபர் பெண்கள் அணியும் உள்ளாடைகளை போட்டுக் கொண்டு திரைப்பட பாடலை திருத்தி பாலியல் சம்பந்தமாகவும், பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும், ஆபாசமாகவும் அறுவருக்கதக்க வார்த்தைகளை பயன்படுத்தியும் பல வீடியோக்களை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இவர் பதிவிடும் பதிவுகள் அனைத்தும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், அந்த வீடியோவை பார்க்கும் நபர்களின் பாலியல் உணர்ச்சிகளை தூண்டும் வகையிலும் உள்ளது. மேலும், இவர் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்கள் மூலம் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பரப்புவதால் அதனை பார்க்கும் நபர்கள், பெண்களை பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கேலி கிண்டலுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.
இதனால் மேற்குறிப்பிட்ட Instagram ID-யை பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்தியும், பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் உடல்ரீதியாகவும், அநாகரிகமாக அறுவருக்கதக்க வகையிலும் வீடியோக்கள் வெளியிட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி மேற்படி பெண் காவலர் செல்வி. பிரீத்தி என்பவர் பெட்டவாய்த்தலை போலீஸ் ஸ்டேசனில் கொடுத்த புகாரின் பேரில் குற்ற என்பவர் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கின் எதிரியை கைது செய்ய திருச்சி எஸ்பி வீ.வருண் குமார் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்டம் கொத்தமாடிகுப்பம். மேல்பட்டி குடியாத்தை சேர்ந்த கௌதம் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.