திருச்சி, பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்தவர் கலீல் அகமது. இவரது மனைவி சைரன் பானு . இவர்களுடைய 16 வயது மகள் கடந்த இரண்டரை வருடங்களாக இன்ஸ்டாகிராமில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாக அந்த வாலிபர் சிறுமியிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி நேற்று முன் தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கரை போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.