கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ், இவர் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை தனது மனைவி, மகளை மிரட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர் என கரூர் டவுன் போலீசில் கடந்த ஜூன் 14ம் தேதி புகார் செய்தார்.
இந்நிலையில் ரூ.100 கோடி நிலஅபகரிப்பு விவகாரத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உதவியதாக வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் பிருத்விராஜ், தற்போது 15 காவலில் சேலம் சிறையில் உள்ளார். காவல் ஆய்வாளர் பிருத்விராஜை சிபிசிஐடி போலீசார் இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள். அப்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் பிருத்விராஜை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.