புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் இறையூர் கிராமத்தில் பட்டியல் இன மக்களை அங்குள்ள அய்யனார் கோயிலில் அனுமதிக்க ஒரு பிரிவினர் மறுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த புதுகை கலெக்டர் கவிதா ராமு, எஸ்.பி. வந்திதா பாண்டே மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பட்டியல் இன மக்களிடம் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரித்தனர். பின்னர்கலெக்டரும், எஸ்.பியும் அந்த மக்களை கோயிலுக்கு அழைத்து சென்று சாமி கும்பி்ட வைத்தனர்.
பட்டியல் இன மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர். கலெக்டர், எஸ்பியின் இந்த நடவடிக்கைக்கு மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசும்போது, சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்கள் ஆன பிறகும் இப்படி ஒரு சம்பவம் நடப்பது வேதனை தருக்கிறது. பட்டியல் இன மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த புதுகை கலெக்டர் கவிதா ராமுவும், எஸ்.பி. வந்திதா பாண்டேவும் சிங்கப்பெண்கள், அவர்கள் பாரதி கண்ட புதுமைப்பெண்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் என்றார்.