மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. 3ம் சுற்றின் முடிவில் அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி 15 காளைகளை அடக்கி முதல் இடத்தில் உள்ளார். மேலும், அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சித் குமார் மற்றும் அருண் குமார் ஆகியோர் தலா 6 காளைகளை அடக்கி 2ம் இடத்தில் உள்ளனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. 12 மணி நிலவரப்படி காளைகள் முட்டியதில் ராஜ்கமல் என்ற போலீஸ்காரர், 17 வயது சிறுவன் ஒருவன் உள்பட 20 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
