இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும், கல்வியாளருமான சுதா மூர்த்தியை ராஜ்ய சபாவின் எம்.பியாக குடியரசு தலைவர் நியமனம் செய்துள்ளார். இந்த தகவலை தனது X பக்கத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவரின் பதிவில்” இந்தியக் குடியரசுத் தலைவர் சுதா மூர்த்தியை ராஜ்யசபாவுக்கு நியமித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சமூகப் பணி, பரோபகாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா மூர்த்தியின் பங்களிப்பு மகத்தானது. அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது. ராஜ்யசபாவில் அவரது இருப்பு நமது ‘பெண் சக்திக்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகும், இது நமது நாட்டின் தலைவிதியை வடிவமைப்பதில் பெண்களின் வலிமை மற்றும் திறனை எடுத்துக்காட்டுகிறது. அவரது பாராளுமன்ற பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.