கூட்டுறவுத்துறை மூலம் தமிழகத்தில் ரேஷன் கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. ரேஷனில் புழுங்கல் அரிசி,பச்சரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டம் முசிறி ரேஷன்கடைகளில் இந்த மாதம் வழங்கப்பட்ட துவரம் பருப்பு தரம் குறைந்த நிலையில் இருந்தது. ஒரு பருப்பு கூட முழு பருப்பாக இல்லை. பாசிப்பருப்பு அளவில் அனைத்து பருப்புகளும் உடைந்து, சிதைந்து அழுக்கடைந்த நிலையில் இருந்தது. இதனால் துவரும் பருப்பு வாங்கிய மக்கள் முகம் சுளித்தபடி வாங்கி சென்றனர். சிலர் பருப்பு வேண்டாம் என கூறிவிட்டனர். இதுபற்றி ரேஷன் கடை ஊழியரிடம் கேட்டால் எங்களுக்கு வந்ததை கொடுக்கிறோம். இதை நாங்களா வாங்கி வந்தோம். அரசு கொடுத்ததை மக்களுக்கு கொடுக்கிறோம் என்று பதில் கூறுகிறார்கள்.
வெளிமார்க்கெட்டில் கிலோ 85 ரூபாய்க்கு ஒரு கிலோ துவரம் பருப்பு விற்கிறது. ரேஷனில் 30 ரூபாய்க்கு கொடுக்கிறார்கள். அதற்காக தரம் குறைந்த நிலையில் உள்ள பொருட்களை மக்களுக்கு வநியோகிக்கலாமா, என்றும் மக்கள் கேட்கிறார்கள்.