Skip to content
Home » கரூரில் அகில இந்திய மகளிர் கூடைப்பந்து போட்டி…. துவங்கியது

கரூரில் அகில இந்திய மகளிர் கூடைப்பந்து போட்டி…. துவங்கியது

  • by Authour

கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவிலான பெண்கள்  கூடை பந்து போட்டிகள் நேற்று தொடங்கியது. லீக் முறையில்  நடைபெற்ற போட்டிகளில் முதலாவது போட்டியில் தென்மேற்கு ரயில்வே அணி 84:37 புள்ளிகள் கணக்கில் சென்னை எஸ்பிசி அணியை வென்றது.

இரண்டாவது ஆட்டத்தில் சென்னை தெற்கு ரயில்வே அணி. 54:50 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு ஜெயின் யுனிவர்சிட்டி அணியை வென்றது.

மூன்றாவது போட்டியில் சட்டீஸ்கர் சாய் ஸ்போர்ட் அணி, சேலம் செயின்ட் ஜோசப் அகாடமி அணியை. 68:29 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

நான்காவது ஆட்டத்தில் சென்னை எஸ் ஆர் எம் பல்கலைக்கழக அணி ,சென்னை ஓசன் பிபிசி அணியை 49:26 வென்றது.தொடர்ந்து நாளையும் லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகளை காண கரூர் மக்கள் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *