இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஏற்கனவே 2 டெஸ்ட்களில் ஆடிஇரண்டிலும் தோல்வி அடைந்துள்ள நிலையில் இன்று 3வது டெஸ்ட் இந்தூரில் தொடங்கியது. டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணி ஆரம்பம் முதல் தடுமாறிக்கொண்டே இருந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சாய்ந்தன. 109 ரன்னுக்கு எல்லாரும் மூட்டையை கட்டிவிட்டனர். அதிகபட்சமாக கோலி 22 ரன்களும், கில் 21 ரன்களும் எடுத்தனர். சிராஜ், ஸ்ரேயஸ் அய்யர் டக் அவுட் ஆனார்கள். மற்றவர்கள் சொற்ப ரன்களையே எடுக்க முடிந்தது.
ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மாத்யூ 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இவருக்கு இது 2வது டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா பேட்டிங் தொடங்கியது. நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். மாலை 3.25 மணி நிலவரப்படி ஆஸ்திரேலியா 2 விக்கெட்(ஹெட், லபுசேன்) இழந்து 108 ரன்களை சேர்த்தது. 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா கைப்பற்றினார். கேப்டன் ஸ்மித், கவாஜா (53) ஆகியோர் ஆடிக்கொண்டிருந்தனர். 36ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழந்து 109 ரன்கள் எடுத்திருந்தது.