முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று திருச்சியில் காங்கிரசார் விமரிசையாக கொண்டாடினர். திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் தலைமையில் புத்தூரில் உள்ள இந்திரா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, மாநில இளைஞரணி தலைவர் விச்சு லெனின் பிரசாத், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், பொதுக்குழு உறுபினரும்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவருமான என்ஜீனியர் பேட்ரிக் ராஜ்குமார், கவுன்சிலர் சோபியா விமலாராணி, கே ஆர் ராஜலிங்கம், கே.டி பொன்னன், தட்சிணாமூர்த்தி, என் ஜி ஓ திருக்கண்ணன், கோட்டத் தலைவர்கள் பிரியங்கா பட்டேல் ராஜா டேனியல் ராய், மலர் வெங்கடேஷ், கிருஷ்ணன், கனகராஜ், தர்மேஷ் ஜெயம் கோபி, ஆர் ஜி முரளி, பகதூர்ஷா, மணிவேல், பாக்கியராஜ், இஸ்மாயில், எட்வின் ராஜ், ராஜா டேனியல், ஆராய்ச்சித்துறை பாண்டியன், மனித உரிமை துறை எஸ் ஆர் ஆறுமுகம், மகிளா காங்கிரஸ் சீலாசெலஸ், இலக்கிய அணி பத்மநாபன், ஐடி பிரிவு அரிசி கடை டேவிட், ஊடகப்பிரிவு செந்தில் குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே இந்திரா காந்தி கல்லூரியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் காங்கிரசார் இந்திரா பிறந்தநாளை கொண்டாடினர். சத்திரம் இந்திரா காந்தி கல்லூரியில் உள்ள இந்திரா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் ,மூத்த தலைவர் கள்ளத்தெரு குமார் மல்லியம்பத்து தனசேகர், அண்ணாசாலை விக்டர், சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் மார்க்கெட் மாரியப்பன் ,கலை பிரிவு ராஜீவ் காந்தி ,இளைஞர் காங்கிரஸ் கம்பை பரத் மோத்தி பெரியசாமி, கண்ணன் சிங்காரவேல் நிர்மல் குமார் கோகுல் கிருஷ்ணமூர்த்தி ரஜினி குமார் இர்பான் சுக்குரு ரகு விஜய் விஷ்ணு முருகன் செந்தில் மற்றும் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.