Skip to content

2வது டி-20.. இந்திய அணி த்ரில் வெற்றி

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று இந்தியா-இங்கிலாந்து 2வது டி-20 போட்டிநடைபெற்றது. இதில்  டாஸ் வென்று இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோஸ்பட்லர் 45 ரன்களும், ஸ்மித் 22 ரன்களும் எடுத்தனர்.இந்திய அணியின் அக்சர் படேல் , வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், அபிசேக் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 166 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால், வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டானார்கள். திலக் வர்மா கடைசி வரை நின்று 72 ரன்கள் எடுத்தார். அவருக்கு வாஷிங்டன் சுந்தர் துணை நின்று 26 ரன்கள் சேர்த்தார். அபிசேக் ஷர்மா 12, சஞ்சு சாம்சன் 5, சூர்யகுமார் யாதவ்12, ரன்கள் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 19.2 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரில் 2-0 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.