Skip to content

கை, கால்களில் விலங்கு- இந்தியர்களை அவமானப்படுத்தி கமென்ட் செய்த எலான் மஸ்க்

  • by Authour

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றதைத் தொடர்ந்து  அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை  அந்த நாட்டு அரசு  திருப்பி அனுப்பி வருகிறது. அப்படி அனுப்பும்போது கை, கால்களில் விலங்கிட்டு,  அவர்களை ராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கிறார்கள்.

கடந்த 4-ம் தேதி காலை டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 5-ம் தேதி மதியம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரை வந்தடைந்தது. அரியானா  மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்த தலா 33 பேர், பஞ்சாப்பை சேர்ந்த 30 பேர், உத்தரபிரதேசம் மற்றும் மராட்டியத்தை சேர்ந்த தலா 3 பேர், சண்டிகாரை சேர்ந்த

2 பேர் என மொத்தம் 104 பேர் விமானத்தில் வந்தனர். அவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.  இந்தியர்கள் கைகளில் விலங்கு பூட்டப்பட்டும், கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டும் விமானத்தில் அழைத்து வரப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.  இரண்டு முறை அழைத்து வரப்பட்டவர்களுக்கும் இதே கதிதான்.  இது குறித்து  அமெரிக்காவுடன் பேசி வருகிறோம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். ஆனால்  அமெரிக்கா தரப்பில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் அமெரிக்க அரசு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அதில், சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலைமை என்று புதிய வீடியோ ஒன்றை அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் சட்டவிரோதமாககுடியேறிய இந்தியர்களின் கைகளில் அதிகாரிகள் கைவிலங்கிட்டு, கால்களில் சங்கிலி கட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவிற்கு எலான் மஸ்க் “ஹாஹா வாவ்” என  கமென்ட் செய்துள்ளார்.

இந்தியர்களை அவமானப்படுத்தும்  மஸ்கின் இந்த  கமென்டால்  உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள்  கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

error: Content is protected !!