Skip to content

இந்திய சாலையின் உள்கட்டமைப்பு அமெரிக்காவை விட சிறப்பாக இருக்கும்.. நிதின் கட்கரி

  • by Authour

மத்திய அரசு விரைவில் புதிய சுங்க கட்டண கொள்கையை அறிமுகப்படுத்தும். தற்போது இது குறித்து நான் அதிகம் பேச மாட்டேன். புதிய கொள்கை அறிவிக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டால், சுங்க கட்டணம் பற்றி யாரும் புகார் செய்ய எந்த காரணமும் இருக்காது என்றார்.

தொடர்ந்து பேசியவர், டெல்லி- ஜெய்பூர், மும்பை- கோவா நெடுஞ்சாலை பணிகள் என் பதவி காலத்தில் ஏற்பட்ட கரும்புள்ளிகள். டெல்லி-மும்பை நெடுஞ்சாலை சூரத் வழியாக போடப்படுகிறது. இதேபோல சூரத்- சென்னை இடையே புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது.

இதேபோல சூரத்தில் இருந்து நேரடியாக நாசிக், அகமதுநகர், சோலாப்பூர் மற்றும் தென்பகுதிகளுக்கு செல்ல முடியும். நிலப்பிரச்சினை தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தது. எனவே சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்குவதில் முடிவில்லாமல் பிரச்சினைகள் இருந்தன.

எனினும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். இந்த சாலை பணி வருகிற ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும். இது கொங்கன் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்” என்று தெரிவித்தார்.

error: Content is protected !!