பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஏ.ஐ.(செயற்கை நுண்ணறிவு) தொழில் நுட்ப உச்சி மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமை தாங்கினார். மாநாட்டை தொடங்கி வைத்து இந்திய பிரதமர் மோடி பேசினார். அவா் பேசியதாவது:
ஏஐ தொழில் நுட்பம் நம்மை ஒருங்கிணைக்கிறது. பொருளாராரம், சமூகத்தை வடிவமைத்து தருவது ஏஐ தொழில் நுட்பு. அனைவருக்கும் இது கிடைக்கும் வகையில் ஏஐ தொழில் நுட்பம் பரவலாக்கப்பட வேண்டும். உலகின் தென் பகுதி மக்களுக்கும் இது சென்று சேர வேண்டும். இது மொழி வேறுபாடுகளை கடந்து மக்களை ஒருங்கிணைக்கிறது. மனித இனத்துக்கான வரைவுகளை இது உருவாக்குகிறது. இது மக்களின் வாழ்வை மாற்றியமைக்கும். ஏஐ தொழில் நுட்பத்தால் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படாது. ஏஐ தொழில் நுட்பத்திற்கான தரவு மையங்களை உருவாக்க வேண்டும். இந்த தொழில் நுட்பத்தின் மீது நம்பிக்கையை வளர்க்க வேண்டும். அதே நேரத்தில் இதனால் ஏற்படும் அபாயங்களை குறைக்க வேண்டும். இதன் மூலம் கல்வி, சுகாதாரம், விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்த முடியும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.