இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. எனவே புதிய தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வுசெய்ய பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் நேற்று தேர்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர். ‘
அப்போது, தேர்தல் ஆணையராக உள்ள ஞானேஷ் குமாரை புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்க முடிவுசெய்யப்பட்டது. இதற்கு ராகுல் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், ஞானேஸ்குமார் தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்வுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து, நாட்டின் 26-வது தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நாளை பதவியேற்க உள்ளார்.
ஞானேஸ்குமார், உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். கேரள ஐஏஎஸ் கேடர். அவருக்கு வயது 62 . இதற்கு முன் மத்திய உள்துறை கூடுதல் செயலாளராக இருந்தவர். 2019 ஆகஸ்ட்டில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட போது, அமித் ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகத்தில் காஷ்மீர் பிரிவின் இணைச் செயலாளராக இவர் பதவி வகித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.