வங்க தேசத்தில் பயங்கர கலவரம் நடந்து வருகிறது. பிரதமர் சேக் ஹசீனாவுக்கு எதிராக இந்த போராட்டம் நடக்கிறது. அவர் தப்பி ஓடிவிட்டார். அவர் தனது தங்கயைுடன் இந்தியாவில் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் தஞ்சடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தலைநகர் டாக்காவில் 5 லட்சத்துக்கும் அதிகமான போராட்டக்காரர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் நாடாளுமன்றம், பிரதமரின் மாளிகையை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி வருகிறார்கள். இந்த கலவரத்தை அடக்க ராணுவம், போலீசார் தடியடி நடத்தினர். கலவரம் ஓயாததால் நடத்திய துப்பாக்கி சூட்டில் இன்று மதியம் மட்டும் 100க்கும் அதிகமானவர்கள் பலியானார்கள்.
கலவரக்காரர்கள் இந்தியாவுக்கு உடுருவுவதை தடுக்க வங்கதேசம், இந்திய எல்லையில் நமது ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே வங்கதேச ராணுவ தளபதி உரையாற்றினார். அவர் மக்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். வன்முறை மூலமாக எதையும் சாதிக்க முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து அங்கு வன்முறை கட்டுக்கடங்காமல் உள்ளது. அமைதி திரும்ப ஒத்துழையுங்கள் என்றும் தளபதி கேட்டுக்கொண்டார்.