அருணாச்சல பிரதேச மாநில இல்லையில் இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே மோதல். தவாங் செக்டரில் அத்துமீற முயன்ற சீன ராணுவத்தினரின் முயற்சியை, இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்தனர். தவாங் செக்டரில் அத்து மீற முயன்ற 300 சீன ராணுவத்தினரை தடுத்து நிறுத்தி இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி தந்துள்ளனர். இருதரப்புக்கும் இடையே நடந்த சிறுமோதலில் இரு தரப்பிலும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், மோதலுக்கு பிறகு இரு தரப்பு ராணுவத்தினரும் தங்கள் நிலைகளுக்கு திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.