Skip to content
Home » பாலஸ்தீனர்களுக்கு இந்தியர்.. இஸ்ரேல் புதிய முடிவு..

பாலஸ்தீனர்களுக்கு இந்தியர்.. இஸ்ரேல் புதிய முடிவு..

ஹமாஸ்- இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கு பகுதி​யில் பதற்​றமான சூழ்​நிலை உருவாகி​யுள்​ளது. இந்த தாக்​குதலின் தொடர்ச்​சி​யாக, இஸ்ரேலில் கட்டு​மானப் பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரக்​கணக்கான பாலஸ்தீன தொழிலா​ளர்​களுக்கு அந்நாட்டு அரசு தடைவி​தித்​தது. அவர்களுக்கு பதில் இந்தியா உள்ளிட்ட நாடு​களி​லிருந்து பணியாளர்களை தேர்வு செய்​யும் நடவடிக்கை​யில் இஸ்ரேல் மும்​முரமாக ஈடுபட்டுள்ளது. ஒரு ​மாதத்​துக்கு இலவச உணவு, தங்​குமிடம் தவிர ரூ.1.5 லட்​சம் சம்​பளமாக வழங்​கப்​படு​கிறது. பாது​காப்​புக்​கும் ​முழு உத்​தர​வாதம் தரப்​பட்​டுள்​ளததால் இஸ்ரேல் கட்டுமான நடவடிக்கை​யில் இந்தி​யர்​களின் ஆதிக்கம் அதிகரித்​துள்ளது. கடந்த ஆண்டு இந்தியா​விலிருந்து இஸ்ரேலுக்கு 16,000 தொழிலா​ளர்​கள் கட்டுமான பணிக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.