டி20 உலக கோப்பையை வென்றதும் கேப்டன் ரோகித், வீரர்கள் கோலி், ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இந்தி்ய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டின் ஒப்பந்த காலமும் முடிவடைவதால் அவரும் அந்த பொறுப்பில் இருந்து விலகுகிறார். இந்த நிலையில் புதிய பயிற்சியாளர் தேர்வு செய்யும் பணியில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ரோஜர் பின்னி கூறுகையில், ‘ரோகித்தும், கோலியும் அற்புதமான ஆட்டக்காரர்கள். அவர்களது இடத்தை உடனடியாக நிரப்புவது மிகவும் கடினம். இந்த தருணத்தில் அவர்கள் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கப்போகிறது. ஆனாலும் அவர்களுக்கு பதிலாக திறமையான இளம் வீரர்கள் கிடைப்பார்கள் என நம்புகிறேன்.
கம்பீர் நிறைய அனுபவம் மிக்கவர். அவர் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றால் அது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயமாக இருக்கும். அவர் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடி இருக்கிறார். அவரது அனுபவம் இந்தியாவுக்கு தேவை’ என்றார்.
இந்த நி்லையில் கம்பீர் குடும்பத்துடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். கிரிக்கெட் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் முன் சாமி தரிசனம் செய்துள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.