புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை புதுநகர் இந்தியன்
வங்கியில் மேலாளராக பணியாற்றி யவர் சரவணன்(35) . இவர் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள செந்தாலை மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர். சுமார் 4வருடங்கள் இங்குபணியாற்றிய சரவணன், கடந்த ஆண்டு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
புதிதாக இங்கு மேலாளராக வந்த கார்த்திக் பிரபு(40) என்பவர், வங்கியின் உள்ள ரொக்க இருப்பு மற்றும் அடமானம் வைக்கப்பட்ட நகைகள், மற்றும் ஏற்கனவேவழங்கங்கப்பட்ட கடன்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
அப்போது பணியிடமாற்றம் பெற்று சென்ற மேலாளர் சரவணன், ரூ28 லட்சத்து 51 ஆயிரத்து639 மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அதாவது போலி கணக்குகள் தொடங்கி கடன் வழங்கியதாக ஆவணங்கள் தயார் செய்து இந்த மோசடியில் அவர் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பேரில் புதிய மேலாளர் பிரபு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் பாரிமன்னன் வழக்குப்பதிவு செய்து வங்கி மேலாளர் சரவணனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.