வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த சனிக்கிழமை இரவு ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். 8 நாள் அரசுமுறைப்பயணமாக வெளிநாடு சென்றுள்ள முதல் அமைச்சர் மு.கஸ்டாலின், இன்று ஸ்பெயினில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். ஸ்பெயின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகலாம்
எனத் தெரிகிறது. இந்த நிலையில் ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலினை , தலைநகர் மாட்ரிட்டில் இந்திய தூதர் தினேஷ் கே. பட்நாயக் தூதரக அதிகாரிகளுடன் சென்று மலர்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் சிறிது நேரம் இருவரும் தொழில் முதலீடுகள் குறித்து பேசிய அவர், முதல்வரின் சுற்றுப்பயணம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவும் உடனிருந்தார்.