புனேவில், இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. துவக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்ட்யா – சிவம் துபே இணை இங்கிலாந்து பவுலிங்கை அடித்து நொறுக்கியதால் ஸ்கோர் எகிறியது. இருவரும் 6 ஆவது விக்கெட்டிற்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஷிவம் துபே,(53) ஹர்திக் பாண்ட்யா (53) அரை சதம் அடித்து மள மளவென இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 181 ரன் எடுத்தனர். அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷிவம் துபே இருவரும் தலா 53 ரன்கள் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சாகிப் மக்மூத் 3 விக்கெட்டுகள் வீழ்தினார்.
182 ரன் இலக்காகக்கொண்டு அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட் 23 ரன்களும் பென் டக்கெட் 39 ரன்கள் சேர்த்து நல்ல துவக்கம் கொடுத்தனர். அதை தொடர்ந்து ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து(51) வருண் பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள், அடுத்தடுத்து ஆட்டமிழக்க இறுதியில் 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில் இந்திய அணி 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் வென்றது. இந்திய அணியில் ரவி பிஸ்னோய் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.