வங்கதேச அணி இந்தியா வந்துள்ளது. முதல் கிரிக்கெட் டெஸ்ட் சென்னையில் நடந்தது. இதில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. 2வது டெஸ்ட் 27ம் தேதி உ.பி. மாநிலம் கான்பூரில் தொடங்கியது. வங்கதேசம் பேட்டிங் செய்தது. முதல்நாள் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தபோது கனமழை கொட்டியது. இதனால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. 2,3வது நாட்களிலும் மழையால் ஆட்டம் நடைபெறவில்லை.
நேற்று 4வது நாள், ஆட்டம் தொடர்ந்தது. வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய இந்தியா 285 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்திருந்தபோது டிக்ளர் செய்தது. தொடர்ந்து வங்கதேசம் ஆடியது- இன்று காலை 146 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது.
17.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. இதனால் வங்கதேசம் ஒயிட் வாஷ் செய்யப்பட்டது. இந்த வெற்றியையும் சேர்த்து இந்தியா உள்நாட்டில் தொடர்ந்து 18வது டெஸ்ட் தொடரை வென்று உள்ளது.
அத்துடன் இந்த தொடரில் இந்திய டெஸ்ட் அணி பல சாதனைகளையும் புரிந்து உள்ளது.ஆட்ட நாயகனாக ஜெய்ஸ்வாலும்,தொடர் நாயகனாக அஸ்விலும் அறிவிக்கப்பட்டனர்.