Skip to content
Home » இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்……

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்……

ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் சிஆர்பிஎப் யில் 9212 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க 25.04.2023 கடைசி நாளாகும். ஜூலை மாதம் தேர்வு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் 12 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வின் மூலம் 579 பணியிடங்கள் நிரப்ப்ப்பட உள்ளன.
தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு வெறும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தி படிக்காத பல்வேறு மாநில இளைஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாத இளைஞர்கள் சிஆர்பிஎப்யில் சேர்வதற்கான சம வாய்ப்பை முற்றிலும் மறுக்கிறது.
அரசியல் அமைப்பு சட்டம் அட்டவணை 08 யில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் ஒன்றிய அரசு தேர்வுகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வருகின்றனர் .

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் எஸ்எஸ்சி தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று 2022 அக்டோபர் 13 ஆம் தேதி அன்று சென்னை, திருச்சி, திருப்பூர், கோயம்பத்தூர், மதுரை ஆகிய 05 மாநகரங்களில் போராட்டம்

நடத்தினார்கள்.

அதன்விளைவாக 2023 ஜனவரி மாதம் 11409 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது.

அதில் எஸ்எஸ்சி தேர்வுகளை தமிழ், மலையாளம், பெங்காளி உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என்று அறிவித்துள்ளது. முதல்முறையாக எஸ்எஸ்சி தேர்வுகளை தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநில இளைஞர்கள் தங்களுடைய தாய் மொழியில் எழுத உள்ளனர்.
ஆகையால் சிஆர்பிஎப் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 22 அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழிகளிலும் நடத்திட கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே கண்டன முழக்க போராட்டம் மாநகர் மாவட்ட தலைவர் லெனின் தலைமையில் நடைபெற்றது.

போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சேதுபதி மாவட்ட பொருளாளர் நவநீதகிருஷ்ணன் மாவட்ட நிர்வாகிகள் யுவராஜ், சந்தோஷ், ஏழுமலை, சோலை, பிரபா உள்ளிட்ட ஏரளமான தோழர்கள் பங்கேற்று கண்டன முழக்கம் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *