Skip to content

சாம்பியன்ஸ் டிராபி: இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும் அணி எது?

 சாம்பியன்ஸ் டிராபியின் முதல் அரையிறுதிப்போட்டி நேற்று  துபாயில் நடந்தது.  இதில் இந்தியா- பாகிஸ்தான்  அணிகள்  இதில் மோதின.     டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி  முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.இந்திய அணி நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தப் போட்டியில் விளையாடியது.

அரை இறுதி ஆட்டத்தின் முதல் ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவரில் டிராவிஸ் ஹெட் பேட்டில் பட்டு லீடிங் எட்ஜ் ஆன பந்தை போதுமான டைமிங் இல்லாத காரணத்தால் அதை ஷமி மிஸ் செய்தார். இருப்பினும் இந்த இன்னிங்ஸில் ஹெட் வசம் லக் இருந்தது. இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரில் இளம் வீரர் கான்லி விக்கெட்டை வீழ்த்தினார் ஷமி.

தொடர்ந்து ஸ்மித் களத்துக்கு வந்தார். அதுவரை அமைதி காத்த ஹெட், அதிரடி  ஆட்டத்தை  தொடங்கினார். 4 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக், ஷமி பந்து வீச்சை துவம்சம் செய்தார். ஷமி வீசிய இன்னிங்ஸின் 5-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார்.

ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்பை தடுக்கும் விதமாக 9-வது ஓவரில் வருண் சக்கரவர்த்தியை கேப்டன் ரோஹித் பந்து வீச செய்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் ஹெட் விக்கெட்டை வருண் வீழ்த்தினார். அதன் மூலம் ஸ்மித், ஹெட் கூட்டணி முடிவுக்கு வந்தது.

அடுத்து வந்த லபுஷேன், ஸ்மித் உடன் விக்கெட்டை விடாமல் ‘தட்டி தட்டி’ ரன்களை சேர்த்தார். இருவரும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தனர். அதன் பலனாக அவர்களும் 50+ ரன்கள் கூட்டணி அமைத்தனர். 36 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த நிலையில் லபுஷேனை ஜடேஜா எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார். தொடர்ந்து இங்கிலிஸையும் ஜடேஜா அவுட் செய்தார். பின்னர் அலெக்ஸ் கேரி உடன் இணைந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஸ்மித்.

96 பந்துகளில் 73 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்து வீச்சில் ஸ்மித் போல்ட் ஆனார். அதற்கு முன்பு வரை ஆஸ்திரேலியா 300+ ரன்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஸ்மித் விக்கெட் அதை மாற்றியது. மேக்ஸ்வெல் வந்த வேகத்தில் வெளியேறினார். அக்சர் படேல் அவரது விக்கெட்டை கைப்பற்றினார்.

அதிரடியாக ஆடி ரன் குவித்த கேரியை ரன் அவுட் செய்து ஸ்ரேயாஸ் வெளியேற்றினார். அவர் 57 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். 49.3 ஓவர்களில் ஆல் அவுட் ஆனது ஆஸி. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் 34 ஓவர்களை மொத்தம் வீசி இருந்தனர். மொத்தம் 176 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் ஜடேஜா மற்றும் வருண் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அக்சர் 1 விக்கெட் கைப்பற்றினார். வேகப்பந்து வீச்ச்சை பொறுத்தவரையில் ஷமி 10 ஓவர்களில் 48 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 இந்தப் போட்டியில் 265 ரன்கள் என்ற இலக்கை விரட்டியது இந்திய அணி. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். கில், 8 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோஹித் சர்மா 29 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்து 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஸ்ரேயாஸ், 62 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஸாம்பா பந்தில் அவர் போல்ட் ஆனார். அக்சர் படேல் 27 ரன்கள் எடுத்தார்.

 

கே.எல்.ராகுல் விரைந்து ரன் குவித்தார். கோலி 98 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெரிய ஷாட் ஆட முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் மூலம் சதம் விளாசும் வாய்ப்பை அவர் மிஸ் செய்தார். ஹர்திக் பாண்டியா 24 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். மூன்று சிக்ஸர்களை அவர் விளாசி ஆட்டத்தின் அழுத்தத்தை குறைத்ததுடன், இந்தியாவுக்கு  வெற்றி நம்பிக்கையை கொடுத்தார். . 48.1 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது.  கே. எல். ராகுல்  சிக்சர் அடித்து  வெற்றியை  வசப்படுத்தினார்.இதன் மூலம் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
 இன்று பாகிஸ்தானில் 2வது அரையிறுதிப்போட்டி நடக்கிறது. இந்தியாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்த நியூசிலாந்தும்,   தென்னாப்பிரிக்காவும் இதில்  மோதுகிறார்கள். இதில் வெற்றி பெறும் அணி வரும்  ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும்.

 

error: Content is protected !!