Skip to content

இந்திய இராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம்…இணையதளத்தில் பதிவு செய்ய அறிவிப்பு..

  • by Authour

இந்திய இராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் 04.01.2024 முதல் 13.01.2024 வரை கடலூர் மாவட்டம் அண்ணா விளையாட்டரங்கில் பல்வேறு பணிகளுக்கான இராணுவ ஆள்சேர்ப்பு சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்திய இராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள அரியலூர் மாவட்டத்தினைச் சார்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து

கொள்ளுமாறும் முகாமில் கலந்துகொள்பவர்கள் ஆதார் அட்டை, கல்விச்சான்றிதழ் மற்றும் கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படத்துடன் கலந்துகொண்டு பயன்பெறுமாறும் மேலும் விவரங்களுக்கு 04425674924, 9499055914, 04329 – 228641 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்;வர்ணா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!