இந்திய கிரிக்கெட் வாரியம் வரைவு அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியத்துடன் பகிர்ந்து கொண்டது. அடுத்த வார தொடக்கத்தில் இறுதி அட்டவணை வெளியிடப்படும். இந்திய கிரிக்கெட் அணி தனது 2023 ஒருநாள் உலகக் கோப்பை முதல் போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 8 அன்று சென்னையில் தொடங்குகிறது. ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகாக்கான வரைவு அட்டவணை அடிப்படையில் இந்தியாவும் பாகிஸ்தானும் அக்டோபர் 15 ம் தேதி மோதுகின்றன. 1,00,000 க்கும் அதிகமானோர் அமரக்கூடிய அகமதாபாத் மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது.
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அக்டோபர் 5 ம் தேதி போட்டித் தொடக்க ஆட்டத்தில் சந்திக்க உள்ளன.இறுதிப் போட்டி நவம்பர் 19 ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும். லீக் கட்டத்தில் பாகிஸ்தான் ஐந்து மைதானங்களில் விளையாட உள்ளது. இந்தியாவின் தற்காலிக அட்டவணை: இந்தியா vs ஆஸ்திரேலியா, அக்டோபர் 8, சென்னை இந்தியா vs ஆப்கானிஸ்தான், அக்டோபர் 11,
டில்லி இந்தியா vs பாகிஸ்தான், அக்டோபர் 15, அகமதாபாத் இந்தியா vs வங்காள தேசம், அக்டோபர் 19, புனே இந்தியா vs நியூசிலாந்து, அக்டோபர் 22, தர்மசாலா இந்தியா vs இங்கிலாந்து, அக்டோபர் 29, லக்னோ இந்தியா vs குவாலிபையர், நவம்பர் 2, மும்பை இந்தியா vs தென் ஆப்ரிக்கா, நவம்பர் 5, கொல்கத்தா இந்தியா vs குவாலிபையர், நவம்பர் 11, பெங்களூரு. வரைவு அட்டவணையில் நவம்பர் 15 மற்றும் 16 ம் தேதிகளில் நடைபெறும் அரையிறுதிப் போட்டிக்கான இடங்கள் குறிப்பிடப்படவில்லை.