140 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்த நாட்டின் பெயர் இந்தியா. தற்போது திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்காக அமைத்துள்ள கூட்டணிக்கு இந்தியா (Indian National Developmental Inclusive Alliance – INDIA) என பெயர் சூட்டப்பட்டதால் மத்தியில் ஆளும் பாஜக அதிர்ச்சி அடைந்தது. இந்தியா என்று சொல்ல முடியாத அளவுக்கு பாஜகவினரும் அதன் கூட்டணி கட்சியினரும் பாதிக்கப்பட்டனர்.
நாட்டின் பெயரையே சொல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். இந்தியா கூட்டணியின் பெயரை உச்சரிக்க வேண்டுமானால் ஐ புள்ளி, என் புள்ளி என சொல்லி வருகிறார்கள். இந்த நிலையில் வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இந்திய நாட்டின் பெயரையே பாரத் என மாற்ற திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்கான மசோதாவும் சிறப்பு கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் இன்று செய்திகள் பரவி வருகிறது. பாஜக தலைவர்கள் பலரும் இந்த தகவலை பகிர்ந்து வருகிறார்கள்.