கரூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் கரூர் மாவட்ட கூடைபந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவில் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி கடந்த 8 ஆம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடைப்பெற்றது.
இதில் ரைசிங் ஸ்டார் சென்னை அணி, சாய்ஸ்போர்ட்ஸ் சட்டீஸ்கர் அணி, கேரளா மின்வாரிய அணி, சென்னை எஸ்.ஆர்.எம் அணி, கேரளா போலீஸ் அணி, மும்பை வெஸ்டர்ன் ரயில்வே அணி, மும்பை சென்ட்ரல் ரயில்வே
அணி, சென்னை சதன் ரயில்வே அணி உள்ளிட்ட 12 அணிகள் கலந்து கொண்டனர். இப்போட்டி லீக் மட்டும் நாக்அவுட் முறையில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் கேரளா மின்வாரிய அணியும், ஹூப்லி மேற்கு ரயில்வே அணியும் மோதியதில் 73க்கு 48 என்ற புள்ளி கணக்கில் கேரளா மின்வாரிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. மூன்றாவது இடத்தை தெற்கு ரயில்வே அணியும், நான்காவது இடத்தை சாய் ஸ்போட்ஸ் சட்டீஸ்கர் அணியும் பிடித்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசும், சுழற்கோப்பையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.