இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நாக்பூரில்நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்து 400 விக்கெட்டுகள் எடுத்தது.
அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்சை இன்று தொடங்கியது. மதியம் 1.30 மணி அளவில் ஆஸ்திரேலியா 64 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதில் தமிழக வீரர் அஸ்வின் மட்டும் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். முதல் இன்னிங்சில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அஸ்வின் டெஸ்ட்களில் மட்டும் 457 விக்கெட்களை எடுத்து உள்ளார். அதில் ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் மட்டும் 96 என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் 2 நாள் ஆட்டம் உள்ளது. முதல் இன்னிங்ஸ் நிலவரப்படி இந்தியா 223 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது. இன்னும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட வேண்டியது இருக்கிறது. எனவே இந்தியாவின் வெற்றி உறுதியாகி உள்ளது. அது இன்னிங்ஸ் வெற்றியா, அல்லது வெற்றியா என்பதற்கான ஆட்டம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.