Skip to content
Home » உலக கோப்பை ஹாக்கி இந்திய அணி அறிவிப்பு

உலக கோப்பை ஹாக்கி இந்திய அணி அறிவிப்பு

2023 ஜனவரி 13 முதல் 29 வரை ஹாக்கி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. 16 நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன. இப்போட்டியில் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் வேல்ஸ் அணிகளுடன் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய ஹாக்கி அணியில் 18 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணி வீரர்கள் விவரம் : கோல்கீப்பர் – கிரிஷன் பகதூர் பதக், ஸ்ரீஜேஷ் ரவீந்திரன் பின்களம் – ஜர்மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), வருண் குமார், அமித் ரோஹிதாஸ் (துணை கேப்டன்), நிலம் சஞ்சீப் செஸ் நடுகளம் – மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், நீலகண்ட சர்மா, ஷம்ஷேர் சிங், விவேக் சாகர் பிரசாத், ஆகாஷ்தீப் சிங் முன்களம் – மந்தீப் சிங், லலித் குமார் உபாத்யாய், அபிஷேக், சுக்ஜீத் சிங் மாற்று வீரர்கள் – ராஜ்குமார் பால், ஜுக்ராஜ் சிங்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!