Skip to content

நிலநடுக்கம்: தாய்லாந்து, மியன்மருக்கு உதவி- பிரதமர் மோடி அறிவிப்பு

இந்தியாவின் வடகிழக்கு எல்லையாக உள்ள மியன்மர், மற்றும் தாய்லாந்து நாடுகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் பயங்கர சேதம்ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.  மியன்மிரில் மட்டும் அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. மியன்மரில்  ரிக்டர் அளவில் 7.2 எனவும், தாய்லாந்தில் 7.7 எனவும் பதிவாகி உள்ளது.

எனவே இரு நாடுகளிலும் பலத்த சேதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இருநாடுகளுக்கும் நிவாரணம்  மற்றும் மீட்பு பணிகளில் உதவ  இந்தியா தயாராக உள்ளதாக  பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.

மியன்மரை ஒட்டியுள்ள இந்தியாவன் மேகாலயா மாநிலத்திலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

error: Content is protected !!