Skip to content

இந்தியா-இங்கிலாந்து மோதும் டி20: கொல்கத்தாவில் இன்று இரவு நடக்கிறது

பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில்முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று இரவு 7 மணிக்கு  நடக்கிறது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் இன்று காலை முதல் ஈடன் கார்டனில்  பயிற்சியில் ஈடுபட்டனர்.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும்  இதுவரை 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13-ல் இந்தியாவும், 11-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.

இந்திய டெஸ்ட் அணி தொடர் தோல்விகளால்  துவண்டு போய் உள்ள நிலையில், இந்திய ரசிகர்களுக்கு  டி20 அணியினர்  வெற்றியைத் தேடி தருவார்கள் என்ற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.