Skip to content

இந்திய கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன் பிஷன் சிங் பேடி காலமானார்..

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி. இடதுகை சுழற்பந்து வீச்சாளரான பிஷன் சிங் 1967 முதல் 1979 வரை இந்திய அணிக்காக விளையாடியிருந்தார். இதில், 22 ஆட்டங்களுக்கு பிஷன் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார். 67 டெஸ்ட்களில் ஆடியுள்ள பிஷன் சிங் 266 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 10 ஒருநாள் ஆட்டங்களில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இவருக்கு கடந்த 1970ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

இந்நிலையில், 77 வயதான பிஷன் சிங் பேடி இன்று காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிஷன் சிங் பேடி இன்று காலமானார். அவரது மறைவிற்கு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!