அரியலூர் மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பாட்டில் ஜீவா மகளிர் சுய உதவிக் குழு மற்றும் நேதாஜி மகளிர் உதவிக்குழு என இரண்டு குழுக்கள் இயங்கி வருகின்றன. இரண்டு குழுக்களும் ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலாளர் த.தண்டபாணி வழிகாட்டுதலோடு கடந்த 17 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. தங்களின் குடும்ப தேவைகளுக்கு குழு பணத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதனுடைய லாபத் தொகையில் ரூபாய் 10 ஆயிரத்தில் 2 கிராம் தங்க காசும் மற்றும் புடவை இனிப்பும் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் 2024 ஆம் ஆண்டு துவங்கியுள்ள நிலையில் வரும் பொங்கல் திருநாளையொட்டி
அரியலூர் கட்சி அலுவலகத்தில் இரு மகளிர் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்ட விழா நடைபெற்றது.
ஜீவா குழு உறுப்பினர்கள் பெ.அஞ்சலை, கு.வெள்ளையம்மாள், பொ.சின்னப்பொண்ணு, மா.காமாட்சி, ரா.காமாட்சி, க. மகேஸ்வரி ச. சங்கீதா, செ.கலா, மற்றும் நேதாஜி குழு உறுப்பினர்கள் மா. நல்லம்மாள், ரா.தனலட்சுமி, ரா. ராணி, ஜோதி, ர. ராணி, ஆ. செல்வி உட்பட 33 பேர்களுக்கு புடவை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
இவ்விழா நிகழ்ச்சியில் ஏஐடியுசி பொதுச் செயலாளர் த.தண்டபாணி, மாவட்டக் குழு உறுப்பினர் திருமானூர் ஆறுமுகம், கயர்லாபாத் து.ராஜா நொச்சிக்குளம் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.