சிறுபான்மையின மக்களுக்கு என்றும் பாதுகாவலனாக இருப்பது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் – கோவையில் நடைபெற்ற இப்தார் புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு …..
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில், தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், கோவை போத்தனூர் சாலையில் உள்ள தனியா மஹாலில், இப்தார் புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில்;-
திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடைய தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர், சிறுபான்மை மக்களுடைய பாதுகாவலராக இருந்து, சட்ட மன்றத்திலே மத்திய அரசால் கொண்டு வரப்படுகின்ற இந்த வகுப்புவாத சட்டத்தை எதிர்த்து மிகப் பிரமாண்டமான மிக சிறப்பான ஒரு தீர்மானத்தை அங்கு முன்மொழிந்து நிறைவேற்றி இருக்கின்றார்கள்.
இந்தியாவில் ஒரு ஆளுமை மிக்க தலைவராக, எப்பொழுதும் திகழ்ந்து கொண்டு இருக்கின்றார். இனி எப்பொழுதும் திகழ்வார். தொடர்ந்து சிறுபான்மை மக்களுடைய பாதுகாவலராக, கலைஞர் எப்படி ஆட்சி நடத்தினோரோ, அதே போல், முதலமைச்சர்களும் அரணாக இன்று நம் முதல்வர் விளங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். மற்றவர்கள் யோசிப்பார்கள் மற்றவர்கள் சிந்தித்துப் பார்ப்பார்கள் மற்றவர்கள் சிலரைப் பார்த்து பயப்படுவார்கள், சில நேரத்திலே அவன் அந்த நிலையெல்லாம் புறந்தள்ளி நாம் எடுத்து இருக்கின்ற கொள்கையில் நமக்கான பிடிப்போடு, நம்ம மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நெஞ்சூரத்தோடு நம்மை வழி நடத்த நம்முடைய கோவை மாவட்டத்தை சார்ந்து இருக்கின்ற சிறுபான்மை மக்கள் உறுதுணையாக இருந்திட வேண்டும் என்று இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.
எங்களிடத்தில் ஒரு அன்பு வேண்டுகோளை முன் வைத்தீர்கள். இந்த வேண்டுகோளுக்கு நான் உறுதியாக சொல்லி இருக்கின்றேன். ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து பேசி இருக்கின்றோம். அந்த புல்லுக்காடு பகுதி இடத்தினுடைய பிரச்சினைகள் சரி செய்யப்பபடும். என்பதையும், அதே போல, பள்ளிவாசல் அனுமதிகளை பற்றி இங்கு சுட்டிக்காட்டினார்கள். அது விரைவாக அதற்கான அனுமதிகளையும், மாவட்ட ஆட்சியரிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டும். விரைவில் தீர்க்காத பிரச்சனைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தரப்படும் என்ற உறுதியும் உங்களுக்கு அன்போடு தெரிவித்துக் கொள்கின்றேன்.
எங்களால் உங்களுக்கு ஏதேனும் உதவி தேவை என்றால், கல்வியாக இருந்தாலும் எந்த உதவியாக இருந்தாலும், உரிமையோடு எங்கள் இடத்தில் சொல்லலாம் அதை செய்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்ற உறுதியை உங்களுக்கு அன்போடு இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
முன்னாள் முதல்வர் கலைஞர் தான் நம்முடைய சிறுபான்மை மக்களுக்கான இட ஒதுக்கீட்டை தந்து வரலாற்று சிறப்பை சேர்த்து இருக்கின்றார். அவர் வழியில் நம்முடைய முதலமைச்சர் தளபதி சென்று கொண்டு உள்ளார்.
கட்டிடப் பணிகள் தொடங்கி தொடர்ச்சியாக முதலமைச்சர் நிதியை தொடர்ந்து வழங்கக் கூடிய முதலமைச்சராகவும், நல்லாட்சியை தமிழ்நாட்டில் முதல்வர் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.
இன்னும் என்ன தேவைகள் இருந்தாலும் சரி, குறிப்பாக இங்க இருக்கக்கூடிய நம்முடைய அனைவருக்குமே சகோதர்களுக்கு சொல்லுவது பொதுவாக ஒரு அரசியல் தலைவன் என்றால், எங்க ஓட்டு போட்டாங்களோ அங்க தான் முதல்ல வேலை செய்வான். வெற்றி பெறாத இடங்களில் பின்னாடி பாக்கலாம், முதலில் நம்மள வெற்றி பெற செய்த இடங்களில் வேலை பார்க்கலாம் அப்படி தான் நினைப்பாங்க. ஆன அல்ல, நம்ம முதலமைச்சர் அப்படி அல்ல 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினராக தானே நினைத்து, அனைத்து தொகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி திட்டங்களை எல்லோருக்கும் எல்லாம் என்ற உன்னத நோக்கத்தோடு செயல்படுத்தக் கூடிய முதலமைச்சர். சென்னை நீங்களாக, அரசு நிகழ்ச்சிக்கு அதிகமாக வந்த மாவட்டம் என்ற பெருமையை கோவை மாவட்டம் பெற்று உள்ளது. இன்னும் நாம் என்ன தேவைகள் இருந்தாலும் கூட முதலமைச்சராக அதை நிறைவேற்றித் தருவதற்கு முதல்வர் தயாராக உள்ளார்.
கடந்த காலங்களில், சாலைகள் செப்பனிடாமல், குறிப்பாக கோவையில் கண் கவர் பெரிய திட்டங்களை மட்டுமே மக்கள் இடத்திலே விளம்பரத்திற்காக செய்து விட்டு சென்றவர்கள் மத்தியில் சாலைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தவுடன், ஏறத்தாழ 433 கோடி ரூபாய்க்கு கோவை மாநகராட்சியில் மட்டும் தார் சாலைகள் ஏற்கனவே இப்பொழுது அமைக்கப்பட்டு இருக்கின்றன. கூடுதலாக 200 கோடி ரூபாய் நிதிகளை பெற்று பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. மேலும், கூடுதலாக 100 கோடி ரூபாய் திட்ட மதிப்புகள் தயார் செய்யப்பட்டு அரசனுடைய ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றன.
மிகப் பிரமாண்டமான திட்டங்கள் என்று சொன்னால் பெரியார் நூலகம் அமைக்கப்பட்டு வருகின்றது. அந்த நூலகத்தை முதல்வர் ஜனவரியில் திறந்து வைக்க உள்ளார். ஏழு மாடிகள் கொண்ட மிக பிரம்மாண்டமான இந்த நூலகம், மாவட்ட மக்களுக்கு திறந்து வைக்க உள்ளார். என்ற மகிழ்ச்சியான செய்தியும் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொண்டு, செம்மொழி பூங்கா ஏறத்தாழ 80 விழுக்காடு பணிகள் முடிவடைந்து உள்ளது. முதலமைச்சர்கள் நமக்காக திறந்து வைக்க இருக்கின்றார்கள் என்பதையும் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொண்டு, இந்த நிகழ்ச்சி என்பது இந்த ஆண்டு மட்டும் அல்ல, ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கு பெறக் கூடிய வாய்ப்பு நீங்கள் உருவாக்கித் தர வேண்டும் என்று அனைவர் இடத்திலும் இந்த நேரத்தில் அன்பான வேண்டுகோளாக வைக்கிறேன். சிறுபான்மை மக்களுடைய பாதுகாவலர் என்று சொன்னால் கலைஞருடைய வழியில் இன்று நல்லாட்சி நடத்துகின்ற திராவிட நாயகர், முதலமைச்சர் என்பதை நாம் நெஞ்சில் நிறுத்தி வரக் கூடிய களம் என்பது நமக்கான களமாக அமைந்திட வேண்டும். ஒரு வாக்குகள் கூட சிதராமல், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய, எங்களோடு போட்டியிடக் கூடிய அனைத்து தோழமை வேட்பாளர்களை வெற்றி பெற வைத்திட வேண்டும். என வேண்டு்கோளை உங்களிடத்தில் வைக்கிறோம். வரக்கூடிய தேர்தல் நமக்கான களம் எனவே, நம் கூட்டணி கட்சி வேட்பாளர்களை பெருமையான வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கூறினார்.