சென்னையை தலைமையகமாக கொண்டு இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் நெல்லை, சேலம் மாவட்டம் சங்ககரி, அரியலூர் உள்பட பல்வேறு இடங்களில் இதன் சிமெண்ட் ஆலைகள் உள்ளன. சென்னையில் உள்ள இந்தியா சிமெண்ட் நிறுவன தலைமையகத்தில் இன்று காலை அதிரடியாக அமலாக்கத்துறை அதிகாாிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.