Skip to content

எல்லையில் இனிப்புகள் பரிமாறிக்கொண்ட இந்திய- சீன படைகள்

  • by Authour

இந்தியா சீனா இடையே பல காலமாக எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்ய முடியாமல் இருக்கிறது.அதற்குப் பதிலாக  எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு அவரவர் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் ரோந்து சென்று வந்தனர். அவ்வப்போது இந்தியப் பகுதிகளுக்குச் சீனா பெயர் வைப்பதும், தங்களது எல்லையில் குடியேற்றங்களை நிறுவுவதுமாகச் சீனா இருக்கிறது. முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் வைத்து இந்திய ரோந்து படை மீது சீன ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதால் நிலைமை இன்னும் மோசமானது. இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியானார்கள்.

ஊடுருவிய நிலப்பகுதிகளிலிருந்து சீன ராணுவம் பின்வாங்க மறுத்து எல்.ஏ.சி. எல்லையை ஒட்டி கட்டுமானங்களை மேற்கொண்டு வந்தது. இதையடுத்து, கடந்த 4 ஆண்டுகளாக  இந்த பிரச்சனையைத் தீர்க்க இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுத்தப்பட்டது. அதன்படி, 2020 ஜூன் மாதத்துக்கு முன் இருந்த உடன்பாட்டின்படி இரு நாட்டு ராணுவமும் ரோந்து செல்ல உடன்பாடு ஏற்பட்டது. எனவே எல்லையில் இருந்து இரு நாட்டு படைகளும் முன்பிருந்த முகாம்களின் துாரத்துக்கு பின்னோக்கி  சென்னு விட்டனர். இந்தியா– சீனா எல்லையில் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவடைந்துவிட்டதை தொடர்ந்து, தீபாவளியை முன்னிட்டு இன்று இந்தியா- சீனா இடையே இனிப்புகள் பரிமாறிக்கொள்ளப்பட்டது. இது நாட்டு வீரர்களும் ஒருவரக்கொருவர் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!