திருச்சி பெரிய மிளகுபாறை அருகே உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி. ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:
ஜனநாயகத்தில் பெரும் அச்சுறுத்தல் உண்டாகி இருக்கிறது. இந்திய நாடு மதசார்பு நாடக உருவாக கூடாது. இந்திய நாடு மதசார்பற்ற ஜனநாயக நாடக இருக்க வேண்டும் என அம்பேத்கர் விரும்பினார். இன்று இந்திய நாடு ஆர் எஸ் எஸ் பிடியில் உள்ளது. மோடி கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை. இந்திய நாடு பன்முக நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. ஆனால் இந்திய பிரதமர் மோடி 3வது இடத்தில் உள்ளது, ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு வழங்கப்படும் மோடி கூறினார். கருப்பு பணம் மீட்கப்படும், 15 லட்சம் நிதி வைக்கப்படும் அனைவரின் வங்கி கணக்கிற்கும் பணம் அனுப்பப்படும் என கூறினார். எல்லாருக்குமான ஆட்சி என கூறினார். ஆனால் கார்பரேட்க்கு துணை போகும் ஆட்சியாக உள்ளது. 140 க்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இதுவே நாட்டின் அழிவிற்கு அறிகுறி.
மோடியால் பாராளுமன்ற நிலைகுலைந்து போய் உள்ளது.ஜெர்மனியில் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடந்தது. இதே போல பல நாடுகளை பார்த்து இருக்கிறோம். நாட்டிற்கு பின்னடைவாக இருந்து உள்ளது.
இந்திய ஜனநாயகம் , குடியரசு சட்டத்தை காப்பாற்ற வேண்டும் என கம்யூனிஸ்ட் விரும்புகிறது. இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்பது நாட்டு மக்களின் முழக்கமாக உள்ளது. அமலக்கத்துறை போன்ற சக்தியை வைத்துக்கொண்டு எதிர் அணி தலைவர்களை அச்சுறுத்துகின்றனர்.
எல்லா மாநிலங்களிலும் அரசியல் நிலைமை ஒரே மாதிரியாக இல்லை. பாஜக வினர் இந்தியா கூட்டணியை உடைக்க வேண்டும் என செயல்படுகிறார்கள். எதிர் அணியினரை ஏவி விடுகின்றனர். இந்தியா கூட்டணியினர் இதனை பேசித்தான் தீர்க்க வேண்டும்.
மக்களின் அடிப்படை பிரச்சனைகளை பார்க்காமல் ஒரு நாடு, ஒருதேர்தல் , ஒரே ரேஷன் கார்டு என மக்களை திசை திருப்பி பார்க்கின்றனர்.
இவ்வாற அவர் கூறினார். பேட்டியின்போது மாநில தலைவர் முத்தரசனும் உடனிருந்தார்.