இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று காலை புனேவில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. நேற்று 10 விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து 259 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 16 ரன் எடுத்திருந்தது. ஜெயஸ்வால் 6 ரன்களுடனும், கில் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று 2ம் நாள் ஆட்டம் தொடங்கியது.
இதில் தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் இந்தியா, நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறார்கள்.இதில் கில் 30 ரன்னிலும், ஜெய்வால் 30 ரன்னிலும், கோலி 1 ரன்னிலும், பண்ட் 4 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதனால் இந்திய அணி 83 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆடி யது. பின்னர் வந்த ஜடேஜா சிறிது நம்பிக்கை அளித்தார். அவரும் 38 ரன்னில் அவுட் ஆனார். சர்ப்ராஸ்கான்(11), ஆகாஷ் தீப்(6), அஸ்வின்(4), பும்ரா(0) என அனைத்து விக்கெட்டுகளும் சீட்டு கட்டுகள் போல சரிந்தன.
45.3 ஓவரில், 156 ரன்கள் மட்டும் எடுத்து, இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வாஷிங்டன் சுந்தர் 18 ரன்களுடன் ஆவுட் ஆகாமல் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் சாண்ட்னெர்(7), பிலிப்ஸ்(2). சவுதி(1) விக்கெட்களை வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் இந்தியா 103 ரன்கள் குறைவாக எடுத்து பின் தங்கி உள்ளது. இதே நிலையில் ஆடினால் 2வது டெஸ்டிலும் நியூசிலாந்து தான் வெற்றி பெறும் என தெரிகிறது.