மத்திய அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மன்சுக் எல். மாண்டவியா 10.12.2022 அன்று டில்லியில் நடைபெற்ற அனைவருக்கும் நலவாழ்வு திட்ட தின நிகழ்ச்சியில் இந்திய அளவில் தொலை தொடர்பு மருத்துவ ஆலோசனை வழங்குவதில் தமிழ்நாட்டில் செயல்ட்டு வரும் அனைவருக்கும் நலவாழ்வு மையங்கள் மூலம் 12 அக்டோபர் முதல் 8 டிசம்பர் வரை 22லட்சத்து 58 ஆயிரத்து 739 தொலை தொடர்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கி முதலிடம் பிடித்துள்ளது. இதற்கான பாராட்டு சான்றிதழும் கேடயமும் தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதிஷ் மத்திய அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்கி கௌரவித்தார்.
