திருச்சி மாநகராட்சி 20வது வார்டு சுயேச்சை கவுன்சிலரும், தேமுதிக மாவட்ட துணைச் செயலாளருமான சங்கர் மற்றும் 50 க்கும் மேற்பட்டவர்கள், தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அப்போது மாநகர திமுக செயலாளர்(தெற்கு) மதிவாணன், பகுதிகழக செயலாளர் பாபு மாவட்ட கழகத் துணைச் செயலாளர் செங்குட்டுவன், பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ்வரன் மற்றும் வட்ட கழக செயலாளர்கள் சுருளி ராஜன், செந்தில், மாவட்ட அமைப்பாளர் மகேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அமைச்சர் மகேஷ் முன்னிலையில், சுயேச்சை கவுன்சிலர் திமுகவில் இணைந்தார்
- by Authour
