புதுக்கோட்டை சேமப்படைமைதானத்தில் இன்று காலை 78வது சுதந்திர தினவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் மு.அருணா தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின்
அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.பின்னர் திறந்த வாகனத்தில் நின்று காவல்துறையினரின்
அணிவகுப்பு மறியாதையை பார்வையிட்டார். பின்னர் பள்ளிமாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பாக பணியாற்றியகாவல்துறையினர் 67பேருக்கும், தீயணைப்பு படைவீரர்கள், அரசு அலுவலர்களுக்கு
பாராட்டு ,நற்சான்றிதழ் களையும்வழங்கினார், பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் 92பேருக்கு ரூபாய் 50,21,244மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். சுதந்திர போராட்ட தியாகிகளின்வாரிசுதாரர்களை ஆட்சியர் கெளரவித்தார்.
விழாவில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் (பொ )ஆர் ரம்யாதேவி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப்ரசூல் ,ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன் , புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, உள்ளிட்ட அரசு அலுவலர்கள் , உள்ளாட்சி அமைப்புகளின்பிரதிநிதிகள் பங்கேற்றனர்.