தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட மொத்தம் சில்லறை கடைகள் உள்ளன தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
தினமும் 3000 பெட்டிகளில் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் கடந்த வாரம் 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி கிலோ ரூபாய் 70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலையை கேட்டதால் அதிர்ச்சியடைந்த இல்லத்தரசிகள் எப்பொழுதும் வாங்கும் அளவை காட்டிலும் குறைந்த அளவே வாங்கி செல்கின்றனர்.
அதேபோல் உணவகங்களுக்கு காய்கறி வாங்குபவர்களும் தக்காளியை குறைந்த அளவிலேயே வாங்கிச் செல்கின்றனர். முருங்கைக்காய், பீன்ஸ், அவரைக்காய் ஆகியவற்றின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. ரூபாய் 96க்கு விற்ற முருங்கைக்காய் 110க்கும், 140-க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் 150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.